Monday 27 October 2014

வினாத்தாளைப்போல



ஓரிரு வினாக்களில்
பதிலுரைக்க
பழக்கமில்லை…..

சரியா?  தவறா?
சரியாகத் தெரியவில்லை.
கோடிட்டு காட்டினாலும்
நிரப்ப வார்த்தைகள் இல்லை.

பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
பொறுமையும் எனக்கில்லை.
சுருங்கச் சொன்னால்
வாழ்க்கையெனும்
விரிவான வினாவிற்கு
விடையை எழுதுவதற்குள்
விடைபெறுகிறது நேரம்.
சரி பார்ப்பதற்குள்
சராசரி வாழக்கையில்
அவுட் ஆவது………..
பதில்களாய் உறவுகள்….
ம்….
ஒரு வினாத்தாளைப்போலத்தான்
வந்து விழுகிறது வாழ்க்கை.