Tuesday, 30 September 2014

வாழ்க்கையும் புத்தகம் போலத்தான்


பட்டுத் தெரிந்தவனிடம்
பார்த்துத் தெரிந்துகொள்
ட்டுத் தெரியாதவனின்
பாதையை மற.

வாழ்ந்து கெட்டவர்களுக்கு
வழிவிட்டு நில்
கெட்டு வாழ்பவர்களை
விட்டு விலகி நில்.

தொட்டும் தொடாமல்
உலகப்பற்று கொள்
கெட்டும் கெடாமல்
நட்பைப் பாதுகாத்துக்கொள்.

தட்டு தடுமாறியேனும்
எழுந்து நில்.
திட்டு பெற்றாலும்
திகட்டாமல் கற்றுக்கொள்.

நிகழ்வுகள் எல்லாம்
னக்கே
நிகழ நினைக்காதே
அனுபவம்  பார்
அலுக்காமல் படி.

ஒவ்வொரு நிகழ்விலும்
"நீ உள்ளிறங்கு"
உணர்வு கொள்
நீயே
அதுவாய் மாறி அனுபவம் கொள்.

வாழ்க்கையும்
புத்தகம் போலத்தான்
புதுசாகவே இருந்தால்
புகழில்லை.